Thursday, November 6, 2008

” அடிமை ” - வழியின்மை


நாய் வாழ்க்கை வாழ முற்பட்டது
என் நேரம் - ஓடி திரிந்தேன்,
நாய் போல் இருந்தேன் !
பணி ஈட்டிக் கொடுத்தேன்,

நாய் போல் இருந்தேன்!
பலனை ஈட்ட இயலாது போயிற்று,


நாயாகவே இருந்திருந்தால்!
பலன் அனைத்தும் ஈட்டிருபேன்,


நாயாய் மாற இறை என்னை படைக்கவில்லை.
வாழ்கின்றேன் நாய் போல்.

” தனிமை துயர் “



உறவுண்டு; உறவில்லை;
உயிருண்டு; உயிரில்லை;

தவிக்கின்றேன் நாளும் தனிமையில்
பிரிவை பிரிவென பார்த்ததில்லை;

உன் முச்சு என்னை வாழ்ச்சைய
உயிர்த்தெழுத்த உயிராய் இருக்கின்றேன்;

நான் வாழும் நாட்கள் உனக்காக
வாழ் முழுவதும் ஏற்று சுமக்கின்றாய் எனக்காக;

“மதிப்பு”



மனிதனையே மதிக்க தெரியாத
மனித இனம்

உன் மதியின்மைக்கு
மற்றவனை குறை கூறதே

உனக்கு மட்டும் என்னட மதிப்பு
மதி; மற்றவனை மதி
மதிப்பு உன்னைத் தேடி வரும்!

“தாயின் பெருமை”



தாயின் பெருமை, அவளின் சிறுமை
நீ என்னை பெற்ற பொது
அதை நான் உணரவில்லை,
நீ என்னை கண்டித்த பொது
உன்னை நான் மதிக்கவில்லை,
நீ என்னை காத்த போது
உன்னை நான் வெறுத்தேன்,
நீ செய்த எல்லாம் நானும் செய்ய ஆசிக்கின்றேன்
“இன்று எனக்கு ஒரு மகள் வந்த பிறகு
"தாயே நீ வாழ்க'

"எழுபும் முன் ஒரு விழிப்பு"



எழுபும் முன் ஒரு விழிப்பு,
சூடான நிலை!!
கால்களுக்கு மட்டும் ஏன் ?
நொடியளவில் உணர்ந்த நிலை
,
என் இனிய நண்பன் கொசுவின் இறப்பு
,
என்னையும் தாக்கவிட்டது

விழித்ததன் பயண் ” என் உயிர் ” -கண்டது
,
கொசுவத்தி சுறுலும், என் (கால்) தலையனையும் உறவில்

சூடான நிலை !!

காத்து செய்(க),பொருத்து நில்(க)
காதல்”

“நட்பு”


நான் வாழ வேண்டுமே என் உயிர் தோழா !
விரல்கள் கோர்த்து நடந்தோம் !
தோள்களை பகிர்தோம் !என் இருண்ட வாழ்வினை ஒளி முடினாய்…………..
ஏன் இத்தனை பாசம் ?என் தளர்த்த நேரங்களில் கை தூக்கிவிட்டாய்………….
ஏன் இத்தனை அன்பு ? என் மகிழ்ச்சி காலத்தை என்னுடன் பங்கிட்டாய்…………
ஏன் இத்தனை ஆர்வம் ?

நீ யார் எனக்கு ? உறவா ? என்ன உறவு ?

தோழா !

நான் வாழ வேண்டுமே உன்னுடன்
இந்த உலகம் முடியும் மட்டில் !!!!!!!!!!!

……… முடிவில்லா
????? ஏன்
!!!!!! மகிழ்ச்சி

“ஏழ்மை”


தையில் போயின் ; தையில் வருமே தச்சனின் கையால்
ஒரு நிமிடம் பாதம் வெறுமையே
நொடியளவில் ஏழையின் பாதத்தை நினைவுக் கூறு
வாழ் முழுவதும் அவன் பாதம் வெறுமையே - ஆனால்
உனக்கு அந்த சில நிமிடம் கடு கடுமையே
உண்கின்றாய் ; குடிக்கின்றாய் ;ஈட்டுகின்றாய் ; உலவுகின்றாய் ;
ஏழை அவைகளுக்கு மட்டுமே உலவுகின்றான் ;
ருசிபதை எல்லாம் அவனுக்கும் நினை
அதிகம் இருந்தால் அவனுக்கும் இறை